இந்தியா, ஏப்ரல் 18 -- பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் பெயர் சமீப காலங்களில் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறது. இவரது பேச்சும் செய்கையும் பல சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. லெஜண்ட் பட நடிகையான இவர், தமன்னாவின் கவர்ச்சி நடனம், சயிப் அலி கானின் கத்திக்குத்து விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் தனது பெயரில் ஒரு கோவில் இருப்பதாகவும், தென்னிந்தியாவிலும் இதுபோன்ற ஒரு கோவில் வேண்டும் என்றும் ஊர்வசி வலியுறுத்தியுள்ளார். இவரது கூற்று வைரலாகி, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் ஊர்வசியின் பேச்சு தற்போது ட்ரோலர்களுக்கு உணவாகியுள்ளது.

மேலும் படிக்க| ஊர்வசி ரவுத்தேலாவை விடாமல் துரத்தும் தாக்கு மகரா...