இந்தியா, ஏப்ரல் 29 -- பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அந்த சமயத்தில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க| 'உங்க படத்த பாக்க மாட்றாங்களா? அப்புறம் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனிங்க' -சல்மான் கானுக்கு நானி பதிலடி

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. என்டிஆர் கடைசியாக தேவரா பாகம் 1 மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார். கேஜிஎஃப் 1,2, சலார் படங்கள் மூலம் பிரசாந்த் நீல் பான் இந்தியா ரேஞ்சில் புகழ் பெற்றுள்ளார். இதனால் ஜீனியர் என்டிஆர்- பிரசாந்த் நீல் கூட்டணியில் படத்தின் மீது அதிக எதிர்...