இந்தியா, மார்ச் 27 -- தூக்கம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும் . எனவே, பெரும்பாலான மக்கள் குறைந்தது எட்டு மணிநேர தூக்கத்தைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக சரியான தூக்கம் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்ற கருத்து பரவி வருகிறது. மருத்துவர்களும் சரியான தூக்கம் வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். நமது வேலை நேரத்திற்கு ஏற்ப தோராயமாக 8 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும் என்பதே தற்போது உள்ள வாதமாகும். ஆனால் நம்மில் சிலர் இந்த சரியான தூக்கத்தை கடைபிடிக்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். இது அவர்களது ஆரோக்கியத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சரியான நேரத்திற்கு தூங்க செல்வதும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்...