இந்தியா, மே 7 -- எதிர்நீச்சல் சீரியல் மே 7 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஆதி குணசேகரனுக்கும் ஈஸ்வரிக்கும் மணிவிழா நடப்பதற்கான ஏற்பாட்டை ரேணுகா, நந்தினி, ஜனனி என எல்லோரும் காலை 3 மணி்கே எழுந்து தயாராகி செய்து வருகின்றனர். வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரும் மணிவிழாவிற்கு தயாராகிவிட்ட நிலையிலும் ஈஸ்வரி தயாராகாமல் எதையோ பறிகொடுத்தவள் போல அமர்ந்திருக்கிறாள்.

மேலும் படிக்க| போராளியின் சண்டை தொடங்குகிறது.. ராயல் சல்யூட்.. ஆபரேஷன் சிந்தூரை பாராட்டிய ரஜினி, விஜய்..

அவளை, வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் சமாதானம் சொல்லி விழாவிற்கு தயாராகச் சொல்கின்றனர். அதற்குள் வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் எல்லாம் வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், ஜான்சி ராணி நடுவீட்டில் அமர்ந்துகொண்டு தும்புகிறாள், இதைப் பார்த்த விசாலாட்சி, ...