இந்தியா, மே 23 -- எதிர்நீச்சல் சீரியல் மே 23 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியல் தொடர்பாக இன்று வெளியான புரோமோவில், 'உலகநாதன் ஜனனியின் பிசினஸ் தொடர்பாக உதவி செய்வதை கேட்ட சக்தி, ஜனனிடம் கோபப்பட்டான். இறுதியில் அந்த உதவி ஜீவானந்தம் மூலமாக வந்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து மேலும் டென்ஷனான சக்தி, இந்த வீட்டில் இனி நீ என்ன செய்வதென்றாலும் என்னை கேட்டு தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு சென்றான். இதைக் கேட்ட ஜனனி அதிர்ச்சி அடைந்து நின்றாள்' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற இருக்கின்றன.

எதிர்நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடில், அனைவரும் தாராவின் தலையில் தண்ணி ஊத்திடுவதற்காக காத்துக் கொண்டிருந்த நிலையில், நந்தினி நேரம் ஆகிக் கொண்டே செல்கிறது;சடங்கு தொடர்பான வேலைகளை ஆரம்பிக்கலாம் என்றாள். ஆனால், கதிரும் அவரது அம்மாவும் பெரியவன் வராமல் இந்த வேல...