இந்தியா, மே 14 -- எதிர்நீச்சல் சீரியல் மே 14 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், வீட்டில் நடந்த பிரச்சனைகளை அடுத்து தன் தம்பிகளை நிரந்தரமாக தன் பக்கம் நிற்க வைக்க வேண்டும் என்பதற்காக, ஆதி குணசேகரன் தன்னுடைய பரோலை யாரிடமும் சொல்லாமல் கேன்சல் செய்யும் வேலைகளில் இறங்கினான். இதை சற்றும் எதிர்பாராத தம்பிகள் தன் அண்ணனுக்காக உருகினர். அதோடு தன் மனைவிகளை கோர்ட் பக்கம் வரக்கூடாது என்றும் கூறினர்.

மேலும் படிக்க| மலையாள சினிமாவில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள்! ஓடிடியிலும் ஒரு கை பார்த்து அசத்தும் 5 படங்கள் இதோ..

இந்த நிலையில், தன் தம்பிகளோடும் வக்கீலோடும் கோர்ட்டுக்கு ஆதி குணசேகரன் சென்றார். அங்கு அவர் ஏற்கனவே பரோல் கேன்சல் செய்யும் வேலையில் ஈடுபட்டதால் ஜாமீன் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயத்தில் கோர்ட்டுக்கு வெளியே காவல் காத்து நின்றனர். அந்த ச...