இந்தியா, மே 5 -- எதிர்நீச்சல் சீரியல் மே 05 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரனின் அம்மா ஈஸ்வரி மணிவிழாவுக்கு தயாராகி விட்டாளா என்று நந்தினி பார்க்க சொல்ல டென்ஷனான நந்தினி, நீங்கள் இப்படி சொல்வதிலேயே எனக்கு பிபி ஏறிவிடும் என்று சாடினாள்.

மற்றொரு பக்கம் குணசேகரன் சக்தியிடம் இந்த மணிவிழா நல்லபடியாக நடக்குமா என்று கேட்க, சக்தியோ இவ்வளவு தூரம் வந்தாச்சு.. பிறகு என்ன அண்ணா என்று ஆசுவாசப்படுத்தினான். அதற்கு குணசேகரன் உன்னுடைய மனைவியை நினைத்தால் தான் எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறினார்.

இதற்கிடையே, ஈஸ்வரி கஷ்டப்படும் படி தர்ஷினி பேச எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து இருந்தனர். ஜனனி தர்ஷினியை கண்டித்தாள். இது தொடர்பான நிகழ்வுகள் சீரியலில் இடம் பெற்று இருக்கின்றன.

மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல் மே 5 ...