இந்தியா, மார்ச் 31 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 31 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷனுக்கான கல்யாண ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, ஜோசியரின் பேச்சைக் கேட்டு மருமகள்களை பரிகாரம் செய்ய வைக்கும் முயற்சிகளில் ஆதி குணசேகரனின் அம்மா ஈடுபடுகிறார். அதற்காக வீட்டை விட்டு போன மருமகள்களை பார்ப்பதற்காக அவர்கள் இருக்கும் இடத்திற்கு கரிகாலனுடன் சென்றார்.

மேலும் படிக்க| தர்ஷன் கல்யாணம்.. கெஞ்சும் மாமியார்.. எகிறும் மருமகள்கள்.. எதிர்நீச்சல் சீரியல்

என்னதான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, தன் பிள்ளைகள் மேல் எந்த தவறும் இல்லை என்பது போல தன் மருமகள்களை குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார். பெண்கள் எல்லாம் வீட்டை விட்டு வெளியே போக தான் தான் காரணம் என தெரிந்தாலும் இப்போதும் பெண்களையே குற்றம் சொன்னார்.

நான் என் பிள்ளைகளை வள...