இந்தியா, மார்ச் 24 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 24 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய ப்ரோமோவில், 'தர்ஷனின் கல்யாணத்திற்கு ஓலை எழுதும் நிகழ்விற்காக அறிவுக்கரசி குடும்பத்தோடு வந்து இறங்கினாள். கூடவே, இனி குணசேகரன் மாமா வீட்டில்தான் நாங்கள் தங்கப்போகிறோம் என்ற குண்டையும் தூக்கிப்போட்டாள். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்து நின்றனர்.

இதற்கிடையே சாமியார் ஒருவர் ஏதோ போனில் பேச, குணசேகரனின் அம்மா நிகழ்வை தடை செய்யும் விதமாக பேசுகிறாள். இதனையடுத்து குணசேகரன், அறிவுக்கரசி உள்ளிட்டோர் மூட நம்பிக்கையையெல்லாம் நம்பிக்கொண்டு இருக்காதீர்கள் என்று சொல்ல, அவர் கேட்ட பாடில்லை. மற்றொரு சக்தி தன்னுடைய பார்ட்னரை பற்றி ஜனனியிடம் பேசுகிறான்.' இது தொடர்பான நிகழ்வுகள் ப்ரோமோவில் இடம்பெற்று இருக்கின்றன.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSI...