இந்தியா, மார்ச் 12 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 12 எபிசோட்: பெண்கள் எல்லாம் வீட்டை விட்டு வெளியே போனதால், அவர்கள் இல்லாமல் தங்களாலும் குடும்பத்தை நடத்த முடியும் என ஆதி குணசேகரனின் தம்பிகள் களத்தில் இறங்கிவிட்டனர். இதற்காக வீட்டு வேலைகள், சமையல் என அனைத்திலும் இறங்கிப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். அதற்கு முதல்கட்டமாக ஞானம் கரிகாலனோடு சேர்ந்து சமையலில் உதவி செய்து வருகிறான். நாமே இனி எல்லா வேலையையும் செய்து பிள்ளைகளை பெரிய ஆளாக மாற்றிக் காட்டுகிறோம் என சபதமும் எடுக்கின்றனர்.

இதற்கு ஏற்றார்போல, விசாலாட்சியும் பிள்ளைகள் எல்லாம் அம்மாவோட முந்தானையை பிடிச்சுட்டு வளர்ந்தவங்க. அவங்கள கைக்குள்ள போட்டுக்க நாம தான் திட்டம் போடனும். இந்த தர்ஷினி தான் தரிகெட்டு திரியுது. அவளோட சேர்ந்து மத்த பிள்ளைகளும் அம்மா பேச்சைக் கேட்டு கெட்டுப் போயி...