இந்தியா, மார்ச் 3 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 03 எபிசோட்: அறிவுக்கரசியின் பணபலத்தால் பார்கவியின் அப்பாவை போலீஸ் பிடித்து போய் சித்திரவதை செய்கிறது. அத்துடன், பார்கவியின் கேரக்டரையே அசிங்கப்படுத்தும் வேலைகளிலும் இறங்கி, போலீஸ் கம்ப்ளையண்ட் கொடுத்து. அவரது அப்பாவையும் கைது செய்து அடாவடி செய்தனர்.

இது தெரியாமல், பார்கவியும் ஜனனியும் பார்கவி அப்பாவை தேடி அலைந்த போது, போலீசார் பார்கவியை மட்டும் ஜட்ஜ் வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின் எவ்வளவு கேட்டும் ஜனனியை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஜனனி, ஜட்ஜ் வீட்டு வாசலில் கத்தி கூச்சலிடுகிறார். இதைப் பார்த்த ஜட்ஜ் ஜனனியையும் உள்ளே கூப்பிட்டு விசாரிக்கிறார். அப்போது, பார்கவி மீதும், அவரது அப்பா மீதும் பொய்யாந வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆதி குணசேகரன், அறிவுக்கரசி, அவரது அப்பா அவர்கள...