இந்தியா, பிப்ரவரி 27 -- எதிர்நீச்சல் சீரியல் பிப்ரவரி 27 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஆதி குணசேகரனால் வீடே கலவரமானதால் எல்லாரும் கோவத்தில் இருக்கின்றனர். இந்த சமயத்தில், வீட்டில் இருந்த பெண்களை சந்திக்க வருகிறார் சக்திவேல்.

அப்போது, நான் போய் எங்க அண்ணன்கிட்ட பேசுறேன். அப்போ தான், இந்த பிரச்சனைக்கு எல்லாம் ஒரு முடிவு வரும் என சொல்கிறான். இதைக் கேட்ட ஜனனி, நந்தினி, ரேணுகா மற்றும் குழந்தைகள் எல்லாம் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

இதற்கிடையில், சொந்த வீட்டில் இருந்து அவமானப்படுத்தப்பட்டு, அறிவுக்கரசி வீட்டில் போய் அமர்ந்துள்ளார். அப்போது, அவர்கள் ஆதி குணசேகரனை மேலும் மேலும் வெறுப்பேற்றி வருகின்றனர். ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஆதி குணசேகரனுக்கு ஆரத்தி எடுக்க கூட ஆள் இல்லாமல் வாசலிலேயே நிற்க வைக்கப்பட்டு திருப்...