இந்தியா, ஏப்ரல் 9 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 9 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷனின் கல்யாண விஷயத்தில் ஆரம்பித்த பிரச்சனை வேறு வேறு வடிவம் பெற்று எங்கெங்கோ போய் நிற்கிறது. ஜெயிலில் இருந்து கல்யாணத்திற்காக ஆதி குணசேகரன் பரோலில் வந்தது, தர்ஷன் மீது ஈஸ்வரியும் பார்கவியும் புகாரளித்தது, அறிவுக்கரசி ஆளை வைத்து அடித்தது, பெண்கள் வீட்டை விட்டு வெளியே போனது, ஆதி குண சேகரன் அசிங்கப்பட்டது, விசாலாட்சி விஷம் குடித்தது, பெண்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தது என பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை.

மேலும் படிக்க| குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியல்

இதற்கு இடையில், பெண்களின் திமிரை அடக்கி அவர்களை இந்த வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறார். ஆனால், அதற்கான திட்டத்தை நேரடியாக தொடங்காமல், தன் தம்பிகளை வ...