இந்தியா, ஏப்ரல் 29 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய முன்னோட்டத்தில், சக்தியும் ஜனனியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் ஜவுளி கடையில் நின்று கொண்டிருந்த நிலையில், நந்தினியும், ஞானத்தின் மனைவியும் இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று புலம்பி கொண்டு இருந்தார்கள்.

உடனே ஜனனி நாங்கள் கோபப்பட்டது இயல்பான ஒரு விஷயம் என்று சொல்ல, சக்தி அவளை வந்து சமாதானப்படுத்தினான். இந்த நிலையில் கடைசி நேரத்தில் நம்மால் ஏதாவது தாமதம் ஆகிவிடப் போகிறது என்பதற்காகதான் நான் பணத்தை ஏற்பாடு செய்தேன் சக்தி கூற, ஜனனி சமாதானம் ஆனாள். இந்த நிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருக்க நந்தினியும் அவளது அக்காவும் அவர்களைப் பார்த்து கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தனர்' இது தொடர்பான நிகழ்வுகள் ...