இந்தியா, ஏப்ரல் 15 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், விசாலாட்சியின் தற்கொலை முடிவுக்கு தாங்கள் காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த பெண்கள் எல்லாம் வீட்டிற்கு வந்தனர். அப்போது, அவர்கள் அத்தனை பேரையும் இதே வீட்டில் வைத்து அடிமையாக்க நினைத்த ஆதி குணசேகரன் தன் திட்டங்களை எல்லாம் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறார்.

மேலும் படிக்க| ஆதங்கத்தை கொட்டிய ஈஸ்வரி.. அழுத தர்ஷன்.. எதிர்நீச்சல் சீரியல்

ஆதி குணசேகரனிந் திட்டம் எல்லாம் தெரிஞ்திருந்தும் பெண்கள் எல்லாம் அவர்களின் பிள்ளைகள் நலனுக்காக வீட்டிலேயே இருந்தனர். அத்தோடு நில்லாமல் முன்பு போல சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்ற வீட்டு வேலைகளை செய்யவும், பாதி நேரத்திற்கும் மேலாக சமையல் கட்டிலேயே நேரத்தை செலவழித்தனர். இதை நேரடியாக அவர்களிடம் ஜனனி சொல்லி...