இந்தியா, ஏப்ரல் 12 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 12 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷன் தன் அப்பா ஆதி குணசேகரனின் மொத்த தனக்கே கிடைக்கப் போகிறது என்பதற்காக காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறான். அத்தோடு நில்லாமல், தன் கல்யாணத்திற்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதற்காக அவளை தன் வருங்கால மாமியார் வீட்டாரின் துணையோடு ஆள் வைத்து அடித்து துன்புறுத்தி மிரட்டி உள்ளான்.

மேலும் படிக்க| ஆதி குணசேகரனின் திட்டத்தை புட்டு புட்டு வைத்த தர்ஷினி.. எதிர்நீச்சல் சீரியல்

இதனால், தர்ஷனை நினைத்து அவனது அம்மா ஈஸ்வரியும், தங்கை தர்ஷினியும் கூனிக் குறுகி நிற்கின்றனர். அதனால், அவனுடன் அதிகம் பேசுவதையே தவிர்த்து விட்டனர். இருப்பினும், வீட்டில் உள்ள ஆண்கள் தூண்டிவிடுவது கூட தெரியாமல் அவன் தன் சிந்திக்கும் திறனையே இழந...