கோவை,கோயம்புத்தூர், ஏப்ரல் 1 -- கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்பொழுது கே.சி.பழனிச்சாமி அதிமுக உறுப்பினரே கிடையாது எனவும், ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகிவிட முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர...