இந்தியா, பிப்ரவரி 24 -- எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவர் தற்போது அவருடைய சொந்த தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

இன்று நடந்த நிகழ்ச்சியி...