இந்தியா, மே 12 -- முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஒரு முக்கிய ஆளுமையாகவும், அதிமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் விளங்குகிறார்.

மேலும் படிக்க:- சட்டமன்ற தேர்தல் 2026: 'அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியுமா?' புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

எடப்பாடி பழனிசாமி, 1954 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் கருப்ப கவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றார். தீவிர அரசியலுக்கு வருவதற்கு மு...