Hyderabad, ஜூன் 13 -- உயர் இரத்த அழுத்தம் முக்கியமான வாழ்க்கை முறை நோயாக இருந்து வருகிறது. மோசமான உணவு முறை, உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை ஆகியவை உயர் இரத்த அழுத்தம் பாதிப்புக்கு காரணங்கள் என கூறப்படுகிறது. அனைத்து வயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பானது ஏற்படுகிறது. தற்போது பலர் இளம் வயதிலேயே உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உண்மையை சொல்வதென்றால், உயர் இரத்த அழுத்தம் இப்போது ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. ஆனால் அதன் தீவிரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கின்றன.

உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ப...