இந்தியா, மே 4 -- மாநில சுயாட்சி இருந்தால் மட்டுமே மத்திய அரசின் முறையற்ற தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும். மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட முடியும். இது மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் கருத்தாக இருக்கும்.

ஆனால் மாநில சுயாட்சி குறித்து, பேசும்போது மாவட்ட, நகர, கிராம பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பரவலைப் பற்றி பேசினால் மற்றும் செயல்பட்டால் மட்டுமே ஜனநாயகம் செழிக்கும்.

அரசியல் சாசனம் பிரிவு 243 (G) கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் எனக் கூறுகிறது.

ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை குறித்த நேரத்தில் நடத்தாமல், தொகுதி மறுசீரமைப்பு பணிகளை காரணம் காட்டி தள்ளிப்போடுவது நியாயமில்லை. ஏனெனில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள், Suresh Mahajan vs State of MadyaPradesh, Rahul Ramesh wagh v...