இந்தியா, மே 16 -- நீங்கள் ஆரோக்கியமாக இருக்க காலையில் இயற்கையான பழக்கத்தை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? கருப்பு நிற உலர்ந்த திராட்சையை இரவு தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் எழுந்தவுடன் முதல் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதனால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.

உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா? அதற்கு நீங்கள் இந்த உலர் கருப்பு திராட்சையை ஊறவைத்த தண்ணீரை தினமும் காலையில் பருகவேண்டும். ஊறவைத்த உலர்ந்த கருப்பு திராட்சை குடிநீரில் அதிகளவில் பாஸ்பரஸ், போரான் மற்றும் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இவையனைத்தும் உங்கள் உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். எலும்புகளின் அடர்த்தியையும் மேம்படுத்தும்.

உலர்ந்த திராட்சைகளில் அதிகளிவில் பொட்டாசியச் ச...