இந்தியா, ஏப்ரல் 15 -- உலக பேட்மிண்டன் தரவரிசை பிடபிள்யூஎஃப் எனப்படும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் டாப் 10 இடத்தில் பெண்கள் இரட்டையர் பிரிவித் த்ரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மற்ற ஸ்டார் வீரர்கள் யாரும் இந்த லிஸ்டில் இல்லை.

பெண்கள் இரட்டையர் ஜோடியான த்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் முதல் 10 இடங்களுக்குள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். ஒற்றைய் பிரிவு நட்சத்திரங்களான பி.வி. சிந்து மற்றும் க்‌ஷயா சென் ஆகியோர் சரிவை சந்தித்துள்ளனர்.

கடந்த வாரம் சீனாவின் நிங்போவில் நடந்த பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப்பைத் தவறவிட்ட த்ரீசா மற்றும் காயத்ரி, ஒரு இடத்தை இழந்து 10வது இடத்துக்கு சரிந்தனர். ஒலிம்பியன்களான தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஜோடி 2...