இந்தியா, மே 6 -- சமீபத்தில் நடைபெற்று முடிந்த பேட்மிண்டன் தொடர்களில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பெரிதாக ஜொலிக்கவில்லை. இப்படியான நிலையில் பேட்மிண்டன் விளையாட்டுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சிலர் முன்னேற்றம் அடைந்திருக்கும் நிலையில், இன்னும் சிலர் தங்களது இடங்களில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடருக்கு பின் காயம் காரணமாக, இந்தியாவின் நட்சத்திர இரட்டையர்களான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சில முக்கிய தொடர்களில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக அவர் புள்ளிப்பட்டியலில் சரிவை கண்டுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் முன்னாள் உலக நம்பர் 1 ஜோடிகளான சாத்விக் - சிராக் 11வது இடத்திலிருந்து 18வது இடத்துக்கு சரிந்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த சுதிர்மான் கோப்பை...