இந்தியா, மார்ச் 15 -- உங்கள் வாழ்க்கையையே மாற்றப்போகும் மந்திரங்கள் என்னவென்று தெரியுமா? ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக்கொண்டு, தங்களின் சிறப்பான செயல்பாடுகளை இந்த உலகத்துக்கு காட்டவேண்டும் என்றால், பலரால் அது முடியாமல் போகலாம். நீங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்களைப் பழகிக்கொண்டால், அது உங்கள் வாழ்வில் பல பிரச்னைகளுக்கு தீர்வைக் கொண்டுவரும். அவை என்னவென்று பாருங்கள்.

பிரச்னைகளை பார்க்காமல், உங்களின் கவனத்தை உங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட விஷயங்கள் மீது திருப்புங்கள். இது உங்களுக்கு மனஅழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

நீங்கள் நல்ல மனநிலையில் இல்லாதபோது முடிவு எடுக்காதீர்கள் என்று கூறுப்படுவது வழக்கம். அது சரி, நீங்கள் மற்றவர்கள் என்ன கூறுவார்கள் அல்லது செய்வார்கள் என்பதற்கு எதிர்வினையாற்றாமல், பதிலளிக்கும் முன் சிறிது நேர...