இந்தியா, ஏப்ரல் 28 -- செட்டிநாடு பால்கறி, இதில் பிரதானமாக உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கப்படும். இந்த பால்கறியை நீங்கள் வேறு காய்கறிகளிலும் செய்யலாம். இந்த பால்கறி செட்டிநாடு விருந்து விழாக்களில் அதிகம் பரிமாறப்படும் ரெசிபியாகும். இந்த ரெசிபிக்கு எந்த எண்ணெய் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது கூடுதல் சுவையைத் தரும்.

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* பச்சை மிளகாய் - 1 (தேவைப்பட்டால் இன்னும் சேர்க்கலாம்)

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* கசகசா - கால் ஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* பட்டை - 1

* கிராம்பு - 2

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* உருளைக்கிழங்கு - 4

* பச்சை பட்டாணி - ஒரு கப்

* பால் அல்லது தயிர் - கால் கப்

* மல்லித்தழை - சிறிதளவு

ம...