இந்தியா, ஏப்ரல் 21 -- இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ள விவரங்கள்

பருவ நிலை மாற்றத்தால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கடந்து சென்று விட முடியாது. அண்மையில் நடந்த ஒரு விஷயத்தை அதற்கு உதாரணமாகக் காட்டலாம். இது வரலாற்றிலே முதல் முறையாக நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கும் உப்பு ஏற்றுமதி செய்யப்படும். தமிழ்நாட்டில் இந்தாண்டு 40 ஆயிரம் டன் உணவிற்குப் பயன்படும் உப்பு குஜராத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. குஜராத்தின் தீன்தயாள் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடியில் 60 சதவீத உப்பு உற்பத்த...