இந்தியா, மார்ச் 2 -- உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்துக்கு அருகே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என ஞாயிற்றுக்கிழமையன்று உயர்ந்துள்ளது."பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேடுதல் நடவடிக்கையின் போது பனிகளுக்கு உள்ளே சிக்கியிருந்த மேலும் ஒரு உடல் ராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இந்த உடல் மனா போஸ்ட் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. மூன்று பேர் வரை காணவில்லை.

இராணுவத்தினர், இந்தோ-திபெத் எல்லை காவல் படை, விமானப்படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவுடன் உடன் இணைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கியிருக்கும் நபர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம்" என ...