மதுரை, செப்டம்பர் 10 -- தமிழக அரசியலில் தேசிய கட்சி ஒன்று மதுரையில் இன்று உதயமாகியுள்ளது. ஆம், பி. எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா, தன் தலைமையில் புதிய அரசியல் கட்சியாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கினார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் புதிய அரசியல் கட்சிக்கான பெயர், இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான நிகழ்ச்சிக்கு, தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பார்மாகணேசன், துணை ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். கட்சிப் பெயரை அறிமுகம் செய்து வைத்த பின், செய்தியாளர்களை சந்தித்த ஜெகநாத் மிஸ்ரா, தன் கட்சியின் கொள்கை, வியூகம், நோக்கம் குறித்து விரிவாக செய்தியாளர்களிடம் பேசினார். இதோ அவர் பேசியதாவது:

''தேசிய செட்...