இந்தியா, ஏப்ரல் 21 -- உங்கள் உடல் உறுப்புக்களை உங்களின் உணர்வுகள் எப்படி பாதிக்கிறது மற்றும் அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் எத்தனை கேடு விளைவிக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் உணர்வுகள் உங்களின் உடல் நலனை கடுமையாக பாதிக்கிறது என்பது உண்மைதான். சில உணர்வுகள், குறிப்பாக கோவம், அச்சம் அல்லது பயம் என இந்த உணர்வுகள் உங்களின் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதில் நோய்களை ஏற்படுத்துகின்றன.

கோவம் உங்கள் கல்லீரலின் இறக்கத்தைக் குறைக்கும். இது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தலைவலி மற்றும் செரிமான கோளாறுகள் இதனால் ஏற்படுகிறது. இதனால் கல்லீரலில் கோளாறுகள், கழிவுநீக்கத்தில் குறைபாடு மற்றும் மனநிலையில் மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.

நீங்கள் தொடர்ந்து அச்சம் கொள்ளும் நபர...