இந்தியா, மார்ச் 6 -- சுகாதார நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால் இந்த நேரத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தேவையான ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. அவர்களுக்குத் தேவையான தண்ணீர் உள்ளிட்ட சத்துக்கள் அதில் நிறைந்து உள்ளது.

ஆறு மாதம் முடிந்தவுடன் குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் திட உணவுகளுக்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் பற்றி பார்போம்..

உங்கள் குழந்தை திட உணவுகளை தொடங்குவதற்கு முன் குறைந்தபட்சமாக அவர்களால் உட்கார முடியுமா? என்று பார்க்க வேண்டும்.

உணவை குழந்தைகள் பாதுகாப்பாக விழுங்குவதற்கு, தலையை நிலையாக நிமிர்ந்தும் வைத்திருக்கும் திறன் மிக முக்கியமானது. உங்க...