இந்தியா, டிசம்பர் 10 -- உங்கள் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்குகிறதா என்பதை ஆர்வமாக இருந்தீர்கள் என்றால் அதன் அறிகுறிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான செரிமான மண்டலம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஒரு ஆரோக்கியமான செரிமான மண்டலம்தான் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் கதாநாயகன் ஆகும். பெரும்பாலான மக்கள், வெளிப்புற தோற்றத்தில் கவனம் செலுத்துகிறார்கள். எடை, ஆற்றல் அளவு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், உங்களின் குடலின் ஆரோக்கியம்தான் உங்கள் உடலை பல இடங்களிலும் பாதிக்கிறது. உங்கள் குடல் நன்றாக இயங்குகிறது என்பதற்கான முக்கிய அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

செரிமான மண்டலத்துக்கும் உங்கள் ஆற்றல் அளவுக்கும் தொடர்பு உண்டு என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஏனென்றால் இரண்டும் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும்...