இந்தியா, மே 3 -- பொய்யுரைப்பவர்களின் உடல் மொழி எப்படி இருக்கும் என்று தெரியுமா? அவர்கள் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவார்கள். அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை ஏமாற்றும் வகையில் இருக்கும். அவர்களின் உடல் மொழி எப்போதும் உண்மையைக் கூறாது. ஒருவர் எப்படி பொய்யுரைக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது எப்படி மற்றும் அதன் அறிகுறிகள் என்னவென்று பாருங்கள்.

பொய்யை மட்டுமே கூறுபவர்கள் கண்களைப் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பார்கள். அவர்கள் உங்களை நேரடியாகப் பார்க்க மாட்டார்கள் அல்லது கண்களை சிமிட்டிக்கொண்டேயிருப்பார்கள். அது அவர்களின் அசவுகர்யம், பயம், பதற்றம், குற்றவுணர்வு மற்றும் பொய்யுரைக்கும்போது மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தின் அறிகுறிகளாகும்.

சுவாரஸ்யமாக, பொய்யுரைப்பவர்கள், ஒருவரை உற்று பார்ப்பதன் மூலம் பொய்யை மறைக்க முயல்வார்கள். அவர்கள் உங்கள் கண்கள...