இந்தியா, பிப்ரவரி 8 -- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று உள்ளது. எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து உள்ளனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. 44 சுயேச்சைகள் உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். திமுகவின் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கே.சீதாலட்சுமி இடையே நேரடி போட்டி நிலவி வந்தது.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14, 439 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகளை பெற்றார். இருவருக்கும் இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் 90,629 ஆக உள்ளது. வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிட்...