இந்தியா, மார்ச் 15 -- எங்கே வேணாலும், எப்படி வேண்டுமானாலும் போகலாம். யாரும் கேட்பது இல்லை என செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக கூறப்படுகிறது. நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மூத்த எம்.எல்.ஏ செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இன்றைய தினம் சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியது பேசு பொருளாகி உள்ளது. வேளாண் பட்ஜெட் முடிந்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்க வந்த போதும் அவர் அங்கு இல்லை. இது அரசியல் ரீதியாக பேசு பொருள் ஆகிஉ உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேள...