இந்தியா, ஜூலை 6 -- முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 7 ஆம் தேதி திங்கட்கிழமை, கோவை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த ஒருநாள் சுற்றுப்பயணத்தின் போது அவர்மொத்தம் 62 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவுள்ளார்.

தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற கருப்பொருளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக அமைகிறது. முதல் கட்டமாக, ஜூலை 7 முதல் 21 வரை கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 34 தொகுதிகளை உள்ளடக்கிய பயணம் தொடங்குகிறது. இந்த பயணத்தின் ம...