இந்தியா, ஏப்ரல் 28 -- அரசு ஊழியர்கள் நலன் கருதி 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து உள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி ஒன்பது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திராவிட மாடல் அரசின் கீழ், அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பால் தமிழ்நாடு பல துறைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என பாராட்டிய அவர், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும் படிக்க:- கோவையில் விஜய்க்கு டஃப் கொடுத்த உதய்! விமான நிலையம் முதல் ரோட்ஷோ! ஒரு கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கோவிட்-19 காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை, இந்த ஆண்டு (2025) முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது. 15 நாட்கள் வரை ...