இந்தியா, மார்ச் 25 -- பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் ஆட்கள் என பலருக்கு மதிய நேர உணவை தயாரிப்பது பெரும் பாடாக இருந்து வருகிறது. ஏனெனில் நாம் எவ்வளவு வித்தியாசமாக உணவுகளை செய்து தந்தாலும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு சில நேரம் சலிப்பு ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் நாம் வழக்கமாக செய்யும் உணவுகளில் இருந்து புதுவிதமான உணவுகளை முயற்சி செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான் பலவகையான ருசியான உணவுகள் கிடைக்கும். இந்த வரிசையில் மதியநேர உணவு தயாரிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம் தான். ஏனெனில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவை தயாரிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால் நாம் காலையில் இருக்கும் பரபரப்பில் வழக்கமாக செய்யும் உணவுகளை முயற்சி செய்கிறோம். இனி அந்த கவலை வேண்டாம் குறைந்த நேரத்தில் எளிமைய...