இந்தியா, ஏப்ரல் 18 -- விஜய் குறித்து வடமாநிலங்களில் இருந்து இஸ்லாமிய அமைப்புகள் அறிக்கைகள் விடுவது வேடிக்கையாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பு, விஜய் இஸ்லாமிய நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக அவரை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த சீமான், "விஜய் உள்நோக்கத்துடன் செயல்படுபவர் அல்ல. அவர் எதார்த்தமானவர். இப்தார் விருந்துக்கு அழைப்பின் பேரில் பங்கேற்றிருப்பார். இதை பீகார், பஞ்சாப், பாகிஸ்தானில் இருந்து அறிக்கை விட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது," என்று கூறினார்.

மேலும், "விஜய் தனிப்பட்ட முறையில் எனக்கு நன்கு தெரிந்தவர். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கவனத்தை ஈர்க்க மட்டுமே பேசப்படுகின்றன. இதற்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டியதில...