இந்தியா, மார்ச் 9 -- இளையராஜாவை தொடர்ந்து பிரபல இசைக்கலைஞரான லிடியன் நாதஸ்வரம் தன்னுடைய சிம்பொனி இசைத்தொகுப்பை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், சிம்பொனி நம்பர் 01. புதிய தொடக்கம்.. 4 மூவ்மெண்ட்ஸ்' என்று குறிப்பிட்டு இருக்கும் அவர் 21.06.2026 உலக இசை நாளான அன்று என்னுடைய சிம்பொனி இசையை வெளியிட இருக்கிறேன்' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் இசைப்பள்ளியில் பயின்றவர் லிடியன் நாதஸ்வரம். பியானோ, டிரம் போன்ற பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கத்தெரிந்த இவர், தன்னுடைய 13 ஆவது வயதில் சிபிஎஸ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான 'தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்று தனது பியானோ வாசிக்கும் திறமையை வெளிப்படுத்தினார். அதில் இவருக்கு 6 கோடியே 96 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்ப...