இந்தியா, பிப்ரவரி 22 -- அகாடமி மியூசியம்:ஆஸ்கர் படங்களுக்கான அகாடமி மியூஸியம் 12 இந்தியத் திரைப்படங்களை திரையிட உள்ளது. மேலும் அப்படங்கள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

உலகளவில் சிறந்த படங்களுக்கும் அதில் பணியாற்றியவர்களை கவுரவிக்கவும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதனை அகாடமி விருதுகள் என அழைப்பர். இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், 'அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்' என பன்னிரெண்டு தரமான இந்தியத் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப் படவுள்ளன.

இத்திரைப்படங்கள் வரும் மார்ச் 7ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை 'வண்ணங்களில் உணர்ச்சி: இந்திய சினிமாவின் ஒரு கலைடாஸ்கோப்' ('Emotion in color: A Kaleidoscope of Indian Cinema') என்ற தலைப்பின்கீழ் திரையிடுவர்.

இந்திய சினிமா வரலாற்றில் 12 திரைப்படங்கள் இவ்வாறு லாஸ் ஏஞ்சல...