இந்தியா, மார்ச் 28 -- Rahu Ketu Transit: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர்கள்.

ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகு கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று ராகு பகவான் கும்ப ராசிக்கு செல்கின்றார் கேது பகவான் சிம்ம ராசிக்கு செல்கின்றார்.

இந்த இரண்...