இந்தியா, மே 4 -- அதிக இரும்புச் சத்துக்கள் கொண்ட இந்த உணவுகள் உங்கள் உடலுக்கு என்ன செய்கிறது என்று பாருங்கள். முறையான உடல் மற்றும் உறுப்புக்களின் இயக்கத்துக்கு இரும்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். இது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. உடல் முழுவதும் ரத்த சிவப்பணுக்கள் வழியாக ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது. இரும்புச் சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த உணவுகள் உங்கள் வாழ்க்கைக்கும், இந்திய சமையலறைக்கும் மிக முக்கியமான தேவையாகும்.

பாலக்கீரை உள்ளிட்ட அனைத்து கீரைகளிலுமே இரும்புச் சத்துக்கள் உள்ளது. குறிப்பாக சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கான இரும்பு கிடைக்கும் சிறப்பான உணவு என்றால் அது பாலக்கீரைதான். இதில் 2.7 மில்லி கிராம் இரும்புச் சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது இரும்புச்சத்துக்களை உடல் விரைவாக உறிஞ்ச உதவு...