இந்தியா, ஜூலை 9 -- உங்களது அன்றாட வாழ்க்கை முறையில் இருக்கும் பிஸியான அட்டவணைகள் காரணமாக, உணவு நேரத்தை தாமதமாகத் தள்ளிப்போடுவது ஆரோக்கியத்துக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கிறது. இரவு உணவின் நேரம் உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இரவு உணவுகள் தாமதமாக, குறிப்பாக படுக்கைக்கு முன்னர் சாப்பிடுவது, உங்கள் ஆரோக்கியத்தை அமைதியாக சேதப்படுத்துகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். மகாராஷ்ட்ரா மாநிலம் தானேயில் உள்ள கேஐஎம்எஸ் (KIMS) மருத்துவமனைகளின் தலைமை உணவியல் நிபுணர் குல்னாஸ் ஷேக், தாமதமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு சேதப்படுத்துகிறது, தாமத இரவு உணவு காரணமாக செரிமான பிரச்னைகள் முதல் இரத்த சர்க்கரை அதிகரிப்பு வரை என என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து எச்டி லைஃப்ஸ்டைல் உடனான உரை...