இந்தியா, பிப்ரவரி 23 -- தற்போது வரும் சளி மற்றும் இருமல் ஆகியவை குறைந்தது 20 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை தொடர்கிறது. அது மக்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பெரிய அளவில் பாதித்து வருகிறது. அதன் அறிகுறிகள் என்ன? அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் என்னவென்றும், அதற்கு தீர்வையும் இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறிய விவரம் -

இந்த தொற்று ஏற்பட்டால், சில நாட்களில் மூக்கில் நீர் வடிதல், தலை பாரம் ஆகியவை தோன்றும், பின்னர் தொடர் இருமல் மற்றும் தும்மல் ஆகியவை ஏற்பட்டு தலை சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஆகியவை ஏற்படும். அதன் பின்னர் சளி நெஞ்சில் கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் சிரமப்படுத்தும். பின்னர் மீண்டும் மூக்கில் நீர் வடியும்.

மேற்கண்ட சுழற்சி பலமுறை நடக்கும், ஒவ்வொரு முறை சுழற...