இந்தியா, மார்ச் 8 -- ரம்ஜான் நோன்பு காலத்தை இஸ்லாமியர்கள் அனுசரித்து வருகிறார்கள். இந்த காலத்தில் அவர்கள் நாள் முழுவதும் நோன்பு இருந்து மாலையில் நோன்பு திறப்பார்கள். அவர்கள் அப்போது ஒரு கஞ்சியை பருகுவார்கள். அந்த கஞ்சி சூப்பர் சுவையானதாக இருக்கும். பொதுவாக அந்த கஞ்சி பள்ளி வாசல்களில் வழங்கப்படும். அதன் சுவையை நாம் எட்டவே முடியாதுதான். எனினும் அந்த கஞ்சியையும் நாம் வீட்டிலே செய்யலாம். அது எப்படி என்று பாருங்கள். அதிலும் இது சிறுதானிய நோன்பு கஞ்சி, ஆரோக்கியத்தையும் அள்ளித்தரக்கூடியது.

* குதிரை வாலி - ஒரு கப்

* பாசிபருப்பு - கால் கப்

(இவையிரண்டையும் சேர்த்து நன்றாக அலசிவிட்டு, ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* நெய் - 2 ஸ்பூன்

* பட்டை - ஒரு இன்ச்

* கிராம்பு - 4

* பிரியாணி இலை - 1

* ஏலக்காய்- 1

* வெ...