இந்தியா, ஜூலை 11 -- இபிஎஸ் உரையைத் திரித்து வெளியிடுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான இன்பதுரை எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் (இபிஎஸ்) உரைகளைத் திரித்து வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் இன்பதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் நிதி நிலை மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து இபிஎஸ் எழுப்பிய கேள்விகளை சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டதாக குற்றம்சாட்டினார்.

"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற எழுச்சிப் பயண பரப்புரையின் போது, இபிஎஸ் பேசிய கருத்துக்கள் சில ஊடகங்களால் பிரித்து, திரித்து வெளியிடப்படுவதாக இன்பதுரை...