இந்தியா, மே 12 -- வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது.

ஜோதிட கணக்குப்படி, மே 12 ஆம் தேதியான இன்று (திங்கட்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், மேஷம் முதல் கன்னி வரை உள்ள 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசியினரே கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தாய் மாமன் வழியில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். வேலையாட்களின் மூலம் மாற்றங்களை உண்ட...