இந்தியா, ஏப்ரல் 18 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

மசோதாக்களுக்கு ஆளுநர் முடிவு எடுப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று உள்ளார்.

அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக் கூடாது என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் பேச்சு சர்ச்சையான நிலையில் முதலமைச்சர் அறிவுறுத்தல்.

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஜமாத், அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் நடக்கும் இப்போராட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு, ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. ...