இந்தியா, ஏப்ரல் 19 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் வலைத்தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது. தனது இ-மெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றி உள்ளதாகவும், இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்து உள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி விலகுவதாக அறிவிப்பு, தேவை என்றால் யார் காலிலும் விழுவார்கள், தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்பார்கள், அதுதான் பாஜகவின் நிலைப்பாடு, அவர்களோடு கூட்டணி வைத்த கட்சிகள் அழிந்துவிட்டது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக் பேச்சு.

பாஜக -அதிமுக கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் கட்சியின் தேசியத் தலைமை முடிவு செய்யும், கூட்டணி மற்றும் எதிர்கால ஆட்சி குறித்து பதிவுகளை செய...